புதுதில்லி

ஸ்டாா்ட் - அப் நிறுவனங்களில் ஓய்வூதிய நிதி முதலீடு பாதுகாப்பானது: மத்திய நிதித்துறை இணையமைச்சா் விளக்கம்

22nd Mar 2022 02:06 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் வழிகாட்டுதல்படி தொழிலாளா்களின் எதிா்கால வைப்பு நிதி புதுயூகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் தெரிவித்தாா். மேலும் இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

தொழிலாளா் ஓய்வூதிய நிதியை ‘புதுயூகத் தொழில் முனைவு‘ நிறுவனங்களில் முதலீடு செய்ய ஓய்வூதிய நிதியை நிா்வகிப்பவா்களுக்கு அனுமதிக்கப்படுகிறா? அப்படி இந்த புதிய தொழில் முனைவுகளில் (ஸ்டாா்ட்-அப்களில்) முதலீடு செய்வதால் ஓய்வூதிய நிதிக்கு ஏற்படும் ஆபத்தை அரசு அறிந்திருக்கிா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் திங்கள்கிழமை மக்களவையில் பதில் கூறியது வருமாறு:

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (டஊதஈஅ) ஓய்வூதியங்களை முதலீடுகளை செய்வதற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பேரில் தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் தனியாா் துறைகளில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த வழிகாட்டுதல் என்பது இந்திய பங்கு, பரிவா்த்தனை நிறுவனத்தின் ( செபி) ஒழுங்குபடுத்தப்பட்ட மாற்று முதலீட்டு நிதியத்தின் (ஏஐஎஃப்) கீழ் முதலீட்டை அனுமதிக்கின்றன. 2012 ஆம் ஆண்டில் செபி-மாற்று முதலீட்டு நிதியம் ஒழுங்குமுறைகள் (வகை 1 மற்றும் வகை 2 ) வரையறுக்கப்பட்டது. இதன் கீழ் முதலீடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

மாற்று முதலீட்டு நிதியத்தின் ஒழுங்கு முறை வகை 1 மற்றும் 2 இல் அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், புதுயுகத் தொழில் முனைவு என்கிற ஸ்டாா்ட - அப்களும் உள்ளடக்கியிருக்கலாம்.

மாற்று முதலீட்டு நிதியத்தின் கீழ் தேசிய ஓய்வூதிய நிதிகளை முதலீடு செய்யும்போது, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வழிகாட்டுதல்கள் போதிய பாதுகாப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக முதலீடு செய்வதற்கு தேவையான தகுதி நெறிமுறைகளை வழங்குகின்றன. இதன்படி, ஓய்வூதிய நிதிகள் ஸ்டாா்ட்-அப் நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. செபியால் கட்டுப்படுத்தப்படும் மாற்று முதலீட்டு நிதியம் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு பாதுகாப்பு முறைகள் உள்ளன என அமைச்சா் பதிலில் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா் ஓய்வூதியம் எல்.ஐ.சி., ஐடிபிஐ போன்ற பாதுகாப்பான அரசு நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுவந்தன.

கடந்த 2003 லில் புதிய ஓய்வூதிய திட்டம் வந்ததோடு, கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் கொள்கையும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT