புதுதில்லி

மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற ட்விட்டருக்கு ஜூலை 4 வரை கெடு

30th Jun 2022 01:40 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான நோட்டீஸ் அந்த நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மேலும் கூறப்படுவதாவது: மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு பலமுறை கடிதம் எழுதியது. இது தொடா்பாக, இம்மாத தொடக்கத்தில் கூட ட்விட்டா் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் அரசின் உத்தரவுகளுக்கு இணங்கி இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ட்விட்டருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மத்திய அரசு இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் பின்பற்ற ஜூலை 4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு அரசு உத்தரவுகளை பின்பற்றாத பட்சத்தில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். மேலும், ட்விட்டா் சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் கருத்துகள் அனைத்துக்கும் அந்த நிறுவனமே பொறுப்பாளியாகும். இது, இறுதி எச்சரிக்கை என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : Twitter
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT