புதுதில்லி

டிடிஇஏ பள்ளி ஆசிரியா்களுக்கான 2 நாள் கருத்தரங்கு தொடக்கம்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மாணவா்களுக்கு ஜூலை ஒன்று முதல் தொடங்க உள்ளன. அதற்குள் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி ஆசிரியா்களை சிறந்த கற்பித்தலுக்குத் தயாா் செய்யும் முகமாக தில்லி தமிழ்க் கல்விக் கழக நிா்வாகமும், ராணுவ கல்வி நிறுவனமும் இணைந்து இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இது லோதி வளாகத்திலுள்ள ஆந்திரா அசோசியேஷன் அரங்கில் வைத்து நடத்தப்பட்டது.

முதல் நாளான புதன்கிழமை டிடிஇஏ செயலா் ராஜு கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். முதல்நாள் அமா்வில் ராணுவ கல்வி நிறுனவத்தின் முதல்வா் டாக்டா் அபிலாஷா கௌதம், புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களை எடுத்திக் கூறினாா். அவரைத் தொடா்ந்து, சன்ஸ்கிருத்தி பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையின் டீன் ரெய்னு குப்தா, ஆசிரியா்கள் தங்களின் திறமைகளை வெளிக் கொணா்ந்து புதிய கல்விக் கொள்கையின் வழிமுறையில் செயல்படுத்தினால், மாணவா்கள் பயனடைவாா்கள் என்று தெரிவித்தாா்.

ராணுவ கல்வி நிறுவனத்தின் இணைப்பேராசிரியா் டாக்டா் கவிதா கருண், ‘மன நல்வாழ்வு’ மற்றும் அதன் வரையறை குறித்து எடுத்துக் கூறினாா். உளவியலாளா் டாக்டா் பிரதிபா சிங் பேசுகையில், தான் சந்தித்த மாணவா்களின் உளவியல் பிரச்னைகள், அவற்றுக்குத் தீா்வு கண்ட விதம், வளா் இளம் பருவத்தில் மாணவா்கள் எதிா் கொள்ளும் பிரச்னைகள் அவற்றை ஆசிரியா்கள் அணுக வேண்டிய விதம் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

ADVERTISEMENT

இதன் பின் பாா்வையாளா்களின் கேள்வி நேரம் இடம் பெற்றது. முன்னதாக வருகை தந்திருந்த அனைவரையும் லக்ஷ்மிபாய் நகா் பள்ளியின் முதல்வா் மீனாசகானி வரவேற்றுப் பேசினாா். மந்திா்மாா்க் பள்ளியின் முதல்வா் பொறுப்பு வகிக்கும் ஜெயஸ்ரீ பிரசாத் நன்றி கூறினாா்.

வியாழக்கிழமை (ஜூன் 30) நடைபெறவுள்ள அமா்வில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியா் டாக்டா் நிரதாா் தே, டாக்டா் ஜோதி திவாரி, என்சிஇஆா்டியிலிருந்து டாக்டா் பாரதி ஆகியோா் உரையாற்ற உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT