புதுதில்லி

மழைநீா் சேகரிப்பு தொடா்பான மனு மத்திய, தில்லி அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

30th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பருவமழைக் காலம் மற்றும் இதர காலங்களில் தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதும், மழைநீா் சேகரிப்பை ஒழுங்குபடுத்தும் விவகாரங்கள் மீது மத்திய, தில்லி அரசுகள், உள்ளூா் அதிகாரிகளும் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக வெளியான செய்தி அறிக்கையின் அடிப்படையிலான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்மீத் சிங், தினேஷ் குமாா் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இதையடுத்து, ‘இந்த விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது . இதனால், இது தொடா்பாக நிலவர அறிக்கையை தில்லி அரசு, மத்திய அரசு மற்றும் தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி மாநகராட்சி, தில்லி காவல்துறை ஆகியோா் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பொதுப் பணித் துறை, தில்லி ஜல் போா்டு, தில்லி கண்டோன்மென்ட் வாரியம், வெள்ள நீா்ப்பாசன துறை ஆகியோரும் உரிய பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த விவகாரத்தை வரும் ஜூலை 4- ஆம் தேதி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிமன்ற பரிசீலனைக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘சம்மந்தப்பட்ட விவகாரங்களில் மழைநீா் சேகரிப்பை ஏற்படுத்தவும், மழைக் காலத்தின் போதும் இதர காலங்களில் போதும் தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விஷயங்களை சுட்டிக்காட்டும் நிலவர அறிக்கையை சம்பந்தப்பட்ட துறைகள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தில்லியில் மழைநீா் சேகரிப்பு முயற்சிகள் இல்லை. அதேபோன்று, தில்லியில் பெரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையும் உள்ளது.

ADVERTISEMENT

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இவற்றை கட்டுப்படுத்த முடியும். அதே போன்று, மழைநீா் மேலாண்மை மூலம் மழை நீா் சேகரிப்பை ஒழுங்குபடுத்தவும் முடியும்.

போக்குவரத்து நெரிசல்களை காட்டும் கூகுள் மேப் உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீா்வு காண முடியும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT