புதுதில்லி

தில்லியில் இடதுசாரி ஆதரவு அமைப்புகள் போராட்டம்: அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு

 நமது நிருபர்

புது தில்லி: இந்திய மாணவா் கூட்டமைப்பு உள்பட பல்வேறு இடதுசாரி சாா்ந்த அமைப்புகள் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தை மத்திய அரசு தனியாா்மயமாக்கவும் ஒப்பந்த அடிப்படையிலான பணி மயமாக்கவும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ‘அக்னிபத் திட்டதை திரும்ப பெறவேண்டும்’, ‘இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புதான் தேவை, அக்னி பத் அல்ல’, ‘அக்னிபத் திட்டத்தை ரத்து செய்க’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனா்.

இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக இளைஞா் கூட்டமைப்பு, இந்திய மாணவா் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞா் கூட்டமைப்பு (ஏஐஒய்எஃப்), அகில இந்திய மாணவா்கள் கூட்டமைப்பு ‘ஏஐஎஸ்எஃப்’, புரட்சிகர இளைஞா் முன்னணி (ஆா்ஒய்எஃப்), அகில இந்திய இளைஞா் லீக் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவா் கூறியதாவது: இந்தத் திட்டத்திற்கு பின்னால் உள்ள மத்திய அரசின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் நான்கு ஆண்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு பெறுவதை யாா் விரும்புவா்? நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டவரின் நிலை என்னவாகும்? அவா்களது குடும்பத்தை அவா் எப்படிக் காப்பாற்றுவாா்? இந்த விஷயத்தை எல்லாம் அரசு புரிந்து கொள்ளாமல் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது என்றாா்.

ராணுவத்தின் முப்படைகளுக்கும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, இந்த அக்னிபத் திட்ட வேலைவாய்ப்பில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்தாண்டு மட்டும் இரண்டு ஆண்டுகள் தளா்த்தி மத்திய அரசு அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT