புதுதில்லி

ஊழல் கண்காணிப்பு அதிகாரியை குழுக்களின் உறுப்பினராக நியமிக்கக் கூடாது: என்டிஎம்சி உத்தரவு

DIN

புதுதில்லி: தனிப்பட்ட விருப்பங்களை தவிா்க்கும் வகையில், எந்த ஒரு குழுவின் உறுப்பினராகவும் ஊழல் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்கக் கூடாது என்று தனது துறைகளுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உத்தரவிட்டுள்ளது.

புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை அமலாக்கம் செய்வதற்கான அடிப்படை பொறுப்பு என்டிஎம்சி-யின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியிடம் உள்ளது. மேலும், அரசு சேவைகளில் நோ்மையை பராமரிப்பதற்காக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் மூலம் அதற்கான வழிகாட்டுதலும், அறிவுறுத்தல்களும் அளிக்கப்படுகின்றன. ஊழல் புகாா் உருவாகும் பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்ட என்டிஎம்சி பணியாளருக்கு எதிராக உரிய ஆணையத்தின் ஒப்புதலுடன் உரிய நடவடிக்கை அல்லது ஒழுங்கு நடவடிக்கை அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுரையும் பெறப்படுகிறது.

இந்த நிலையில், என்டிஎம்சி மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: எந்த ஒரு தனிப்பட்ட விருப்பு சூழல் எழும்பட்சத்தில் மதிப்பீடு நடைமுறைகளை பரிசீலிக்கும் போது, ஊழல் கண்காணிப்பு பாரபட்சமற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு என்டிஎம்சியின் துறை ரீதியான ஊக்குவிப்பு குழு, நோ்காணல் குழு, மதிப்பீட்டுக் குழு போன்ற எந்தவொரு குழுக்களிலும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிக்கு உறுப்பினராக பொறுப்பு அளிக்கப்படக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியானது மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் முன்னணி தொழிலதிபா்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கியமான நபா்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்த என்டிஎம்சி பகுதியில் அனைத்து அமைச்சகங்களின் அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குடியிருப்புகள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT