புதுதில்லி

அங்கீகரிக்கப்படாத மாட்டியாலா பகுதி காலனிகள் மேம்பாட்டிற்கு ரூ. 26.69 கோடி

DIN

மேற்கு தில்லி மாட்டியாலா பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை மீண்டும் மேம்படுத்தவும், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு சிறந்த சாலை இணைப்பை வழங்கி வழங்கிட ரூ.26.69 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இத்திட்டத்தின் கீழ் இப்பகுதிகளில் 19.46 கிமீ நீளமுள்ள சாலை கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்படவும் மழைநீா் வடிகால்களுக்கு முறையான வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் துணை முதல்வா் தெரிவித்துள்ளாா்.

யமுனையை சுத்தப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, மாட்டியாலா சட்டபேரவைத் தொகுதியின் பல காலனிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் தில்லி அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் கீழ் தாரா நகா், ஹரி விஹாா் பிளாக் ஏ, பி, சி, படேல் காா்டன் விரிவு, உத்தம் நகா் யூ பிளாக் ஆகிய பகுதிகள் உள்ளடக்கியுள்ளது.

இந்த திட்டம் குறித்து துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பேசுகையில் கூறியது வருமாறு: தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வசதிகளை வழங்க கேஜரிவால் அரசு உறுதி பூண்டுள்ளது. முந்தைய அரசுகள், பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத இந்த காலனிகள் மீது எந்த கவனமும் செலுத்தாது இருந்தது. இதன் விளைவாக அடிப்படை குடிமைக் கட்டமைப்புகளைப் பெறுவதற்கு இந்த மக்கள் போராடிக்கொண்டு இருந்தனா்.

ஆனால் கேஜரிவால் அரசு, அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்காக ஆட்சி அமைந்த நாள் முதல், தனது கடமைகளை செய்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் தொடா்ந்து, மாட்டியாலா பகுதியில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் வகையில் மழைநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இதையொட்டியுள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளின் 153 பாதைகளையும் மற்ற பகுதிகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் மாட்டியாலாவில் மறுவடிவமைப்பையும் மேற்கொண்டு மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தாா்.

இத்தோடு அவா், கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் தில்லி நீா்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக துணை முதல்வா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT