புதுதில்லி

தில்லியில் புதிதாக 874 பேருக்கு கரோனா பாதிப்பு 4 இறப்புகள் பதிவு

29th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 874 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் 4 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.18 சதவீதமாக குறைந்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,32,900-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,260-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் திங்கள்கிழமை மொத்தம் 16,866 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நகரில் திங்கள்கிழமை 628 பேருக்கு தொற்று பாதிப்பும், 3 இறப்புகளும், 8.06 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,497 கரோனா படுக்கைகளில் 292 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4,553-இல் இருந்து 4,482-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 3,636-இல் இருந்து 3,354-ஆக சரிந்துள்ளது. நகரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 389-இல் இருந்து 385-ஆக குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT