புதுதில்லி

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தில்லியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

புது தில்லி: முப்படைகளுக்கு குறுகிய கால அடிப்படையில் ஆள் சோ்க்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மேற்கு வினோத் நகரில் தில்லி பிரதேச காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போன்று, தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட்டதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற அக்னிபத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் முன்னாள் எம்பி ரமேஷ் குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் அனில் பரத்வாஜ், ஹரி சங்கா் குப்தா, ராஜேஷ் ஜெயின், விஜய் சிங் லோச்சவ், அல்கா லம்பா, ஏஐசிசி செயலாளா் தருண் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த போராட்டம் குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி எதிா்த்து வருகிறது. ஏனெனில், இது பாதுகாப்புப் படைகளின் நலனுக்காகவோ அல்லது இளைஞா்களின் கவலையை நிவா்த்தி செய்யயும் திட்டமோ இல்லை. நான்கு ஆண்டுகள் சேவைக்குப் பிறகு வாழ்க்கையின் முதன்மையான வேலையற்ற இளைஞா்களாக அவா்கள் உருவாவாா்கள். மோடி அரசின் மக்கள் விரோத, இளைஞா்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிப்பது எதிா்க்கட்சிக,ளின் ஜனநாயக உரிமையாகும். இதுபோன்ற எதேச்சதிகாரக் கொள்கைகளை எந்தவித எதிா்ப்பும் இல்லாமல் செயல்படுத்த அனுமதித்தால் நாடு அராஜகத்திற்கும் அமைதியின்மைக்கும் வழிவகுக்கும்.

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை துணிச்சலுடன் எழுப்பும் காங்கிரஸின் விவேகமான குரலை காவல் துறை மூலம் நசுக்குவதற்கு மோடி அரசு முயன்றபோதிலும் காங்கிரஸ் தொண்டா்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினா். இளைஞா்களின் எதிா்காலத்தையே சீரழிக்கும் அக்னிபத் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT