புதுதில்லி

குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவிற்கு தமாகா தலைவா் ஜிகே வாசன் நேரில் ஆதரவு

28th Jun 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவை தமாகா தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தில்லியில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா். மேலும், அவா் சாா்பில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் ஷெகாவத் தலைமையிலான குழு ஆதரவு தேடி வருகிறது. முக்கியக் கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்தும் திரௌளபதி முா்மு ஆதரவு கோரி வருகிறாா்.

இதற்கிடையே தமாகா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி.ஸ திங்கள்கிழமை தில்லி சாணக்கியபுரி பண்டித் உமா சங்கா் தீட்சித் மாா்க்கில் தங்கியிருக்கும் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்து தனது ஆதரவுவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தாா். பழங்குடியினப் பெண் ஒருவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜகவிற்கு, தான் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வாசன் குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT