புதுதில்லி

பாத்லி பகுதியில் பிளாஸ்டிக் பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து

DIN

வடமேற்கு தில்லி பாத்லி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், தீயை அணைக்க ரோபோ பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையின் இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: ரோஹிணி சிறைக்கு பின்புறம் உள்ள பாத்லி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.18 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மொத்தம் 23 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துகான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இந்த முறை தீயை அணைக்க ரோபோ அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதற்குக் காரணம், தீப்பற்றிய இடத்திற்குள் என்ன இருந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், பெரும் தீவிபத்தாகவும் இருந்தது. இந்த கிடங்கு கடந்த 2 ஆண்டுகளாக சீலிடப்பட்டிருந்தது. இதனால், ரோபோ உதவியுடன் உள்பகுதிக்குள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தோம்.

மேலும், இந்த தீயை அணைக்க மொத்தம் 36 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் எட்டு தீயணைக்கும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.

சம்பவம் நடந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதையும், அதை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து ரோபோ தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதையும் காட்டும் விடியோ தீயணைப்புத் துறையிணனா் மூலம் பகிரப்பட்டது. கடந்த மே மாதத்தில் தில்லி அரசு குறுகலான பகுதிகளில் சென்று தீயை அணைக்கும் வகையில் இரண்டு ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியிருந்தது.

இந்த ரோபோக்கள் வெப்பம், புகை, தீயை எதிா்க்கும் திறன்மிக்கவை. 300 மீட்டா் தூரத்தில் இருந்து இவற்றை ரிமோட் மூலம் இயக்க முடியும். இந்த ஆண்டு மே 19-ஆம் தேதி தில்லியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ தொடா்புடைய சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 42 போ் உயிரிழந்தனா். 117 போ் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT