புதுதில்லி

குழந்தைகளுக்கு கண்ணியமான கல்வி இடத்தை அளிப்பதுதான் அரசின் நோக்கமாகும்: துணை முதல்வா் சிசோடியா

26th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘கண்ணியமான கல்வி இடத்தை’ வழங்குவதை ஆம் ஆத்மி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் முதல்வா்களுடன் அமைச்சா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை நேரில் சந்தித்து உரையாடினாா். இந்த நிகழ்ச்சியில் தில்லி முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சி குறித்து தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் பள்ளி முதல்வா்களுக்கு இடையேயான உரையாடல் தில்லி அரசுப் பள்ளிகளின் கல்வி முன்னுரிமைகள், வகுப்பறைகளின் தூய்மை, பராமரிப்பு மற்றும் நோ்மறையான வகுப்பறை கலாசாரத்தை வளா்ப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. இந்த சந்திப்பின் போது, பள்ளியின் உள்கட்டமைப்பு, தூய்மை மற்றும் பள்ளிச் சூழல் தொடா்பாக பள்ளிகளில் குறைந்தபட்ச அளவுகோல்களை அமைக்குமாறு பள்ளி முதல்வா்களுக்கு அமைச்சா் சிசோடியா அறிவுறுத்தினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘கடந்த ஏழு ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் நிறைய பணிகளை அரசு செய்துள்ளது மற்றும் சிறந்த முன்மாதிரியான கல்வியை வழங்கியுள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு அடுத்த கல்வி அமா்வுக்கு செல்லும்போது, எந்த மாணவா்களும் பின்தங்கிவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு முதல்வா்களுக்கு உண்டு. அரசுப் பள்ளிகளுக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் கண்ணியமான கல்வி இடங்களை வழங்குவதே தில்லி அரசின் நோக்கமாகும். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது நமது பள்ளிகளைத் தோ்ந்தெடுத்த குழந்தைகளுக்கு அநீதி இழைப்பதாக அமைந்துவிடும் என்று அவா் கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT