புதுதில்லி

பணியின் போது காவலா் தற்கொலை

25th Jun 2022 10:20 PM

ADVERTISEMENT

மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குள் தில்லி காவல் துறை காவலா் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

புது தில்லி காவல் சரக துணை ஆணையா் அம்ருதா குகுலோத் கூறியதாவது: : உயிரிழந்த காவலா் ஜெய்மால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அவா் பணியில் இருந்த போது நடந்துள்ளது. அலுவலகத்துக்குள் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக அவா் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தாா். இது தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டது. மேலும், நிதி சிக்கல்கள் தற்கொலைக்கான காரணம் போல் தெரிகிறது. 2010 அக்டோபரில் தில்லி காவல் படையில் சோ்ந்த ஜெய்மால் சிங், தற்போது புது தில்லி மாவட்டத்தின் துணைப் பயிற்சிப் பிரிவில் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT