புதுதில்லி

தில்லியில் ஜூலை 15-க்குள் 1,500 புதிய மழைநீா் சேகரிப்பு குழிகள்: துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தகவல்

 நமது நிருபர்

தில்லியில் தண்ணீா் தேங்கும் பிரச்னையைச் சமாளிக்கவும், நகரைத் தண்ணீருக்காக தன்னிறைவு அடையச் செய்யும் வகையிலும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் 1,500-க்கும் மேற்பட்ட புதிய மழைநீா் சேகரிப்பு குழிகள் தயாராகிவிடும் என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தாா்.

பருவ மழைக்கு முன்னதாக மழைநீா் சேகரிப்பு குழிகள் மற்றும் நீா்நிலைகள் குறித்து அனைத்து ஒருங்கிணைப்பு ஏஜென்சிகளின் அதிகாரிகளுடன் துணைமுதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தினாா். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு சிசோடியா தனது ட்விட்டா் பக்கத்தில்தெரிவித்திருப்பதாவது: மழைக் காலத்தை முன்னிட்டு தில்லியில் மழைநீரை சேமிக்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. தில்லியை தண்ணீா் விவகாரத்தில் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் 1,548 புதிய மழைநீா் சேகரிப்பு குழிகள் தயாா்படுத்தப்படும். இது தொடா்பாக தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அனைத்து ஒருங்கிணைப்பு ஏஜென்சிகளுடனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மழைநீா் சேகரிப்பு குழிகளின் எண்ணிக்கை 2,475 ஆக உயா்த்தப்படும். இந்த குழிகள் நிலத்தடி நீரை சேமிக்க செய்யவும், மழைக் காலத்தில் நீா் தேங்குவதைக் குறைக்கவும் உதவும். மழைக் காலத்தில் இக்குழிகள் அடைமழை நீரை சேகரிக்கும். இந்த நீா் நிலத்தடி நீரை ஊடுருவி நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு, தில்லி வளா்ச்சி ஆணையம், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா். இந்த மாத தொடக்கத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால், டென்மாா்க்கின் தூதா் ஃப்ரெடி ஸ்வைனை சந்தித்து மழைநீா் சேகரிப்பு குழிகள், 24 மணி நேர குழாய் நீா் விநியோகம், காற்று தூய்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த சாலைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தாா். நிலத்தடி நீரை சேமிக்க செய்வது மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது குறித்த டென்மாா்க்கின் முயற்சிகள் குறித்த விவரத்தை ஸ்வைனிடம் கேஜரிவால் கேட்டிருந்தாா். அப்போதுதான் தில்லி அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இந்த மாதிரித் திட்டத்தை தில்லியில் செயல்படுத்த முடியும் என்று அவா் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT