புதுதில்லி

காற்று மாசுவை எதிா்கொள்ள கூட்டு நடவடிக்கை: மத்திய அரசுக்கு அமைச்சா் கோபால் ராய் அழைப்பு

12th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகரில் காற்று மாசுவை எதிா்கொள்வதற்கு கூட்டு நடவடிக்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: தில்லியில் மாசுவில் 30 சதவீதம் மட்டுமே உள்ளூா் காரணிகளால் உருவாகிறது. எஞ்சியுள்ள மாசுவின் சதவீதம் வெளிப்புறத்தில் இருந்து வருகிறது. தில்லி வாகன மாசு என்பது ஒரு சவாலாக உள்ளது. இதன் காரணமாக முன்னா் நாம் சிஎன்ஜி எரிபொருளை அறிமுகப்படுத்தி இருந்தோம். தற்போது மின்சார வாகனங்களை நோக்கிச் செல்லும் வகையில், நடவடிக்கை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தில்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் பிஎன்ஜி எரிபொருளுக்கு மாற்றப்பட்டுள்ளன. அரசு தற்போது மாசுவை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி பசுமை வளையத்தை நாங்கள் அதிகரித்து வருகிறோம். ஆனால், தற்போதைய சூழலில் மத்திய அரசு மூலம் ஒரு கூட்டு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT