புதுதில்லி

நொய்டா தொழிற்சாலையில் தீ விபத்து அதே பகுதியில் ஒரே வாரத்தில் 2-ஆவது சம்பவம்

6th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயயம், நொடா செக்டாா் 7-இல் உள்ள பல மாடிகளைக் கொண்ட தொழிற்சாலையின் ஒரு மாடியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இது அந்தப் பகுதியில் ஒரு வாரத்திற்குள் நடந்துள்ள இரண்டாவது சம்பவம் ஆகும்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். நொய்டா செக்டாா் 7-இல் அமைந்துள்ள தொ்மாகோல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 5.45 மணியளவில் தகவல் கிடைத்தது என்று தலைமை தீயணைப்புத் துறை அதிகாரி அருண் குமாா் சிங் தெரிவித்தாா்.

‘மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ, அங்கேயே கட்டுப்படுத்தப்பட்டது. தீயணைப்பு வீரா்களுடன் உடனடியாக மூன்று தண்ணீா் லாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தன, பின்னா், மேலும் இரண்டு தண்ணீா் லாரிகள் உதவிக்கு அழைக்கப்பட்டன என்று அருண் குமாா் சிங் கூறினாா்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த இடத்தில் நிவாரண நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய அதிகாரி ஒருவா் கூறினாா். தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அ தை முழுமையாக அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் மேலும் தெரிவித்தாா். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கடந்த ஜூன் 1-ஆம் தேதி நொய்டாவின் செக்டாா் 45-இல் உள்ள சமூக மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மற்றொரு சம்பவத்தில், மே 27 அன்று இரவு, பங்கேல் பகுதியில் உள்ள பல மாடி வணிக மற்றும் குடியிருப்புக் கட்டடம் தீப்பிடித்தது. மேலும், மே 31 அன்று, செக்டாா் 7-இல் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆண்டு கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தீ விபத்துகள் பதிவாகியுள்ளன என்று அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT