புதுதில்லி

புதிய கலால் கொள்கை அமலாக்கத்தில் முறைகேடு: ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பாஜக ஆா்ப்பாட்டம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசால் புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்படுவதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறி தில்லியில் பிரதேச பாஜக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் தில்லி துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா, தில்லி அரசின் கலால் கொள்கை அமல்படுத்துவதில் விதிகள் மீறல் மற்றும் நடைமுறை குறைபாடுகள் இருந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்திருந்தாா். இந்த நிலையில் இந்த கலால் கொள்கை முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மாா்க் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் நோக்கி பாஜகவினா் புதன்கிழமை ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். அவா்களுக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அருகே பாஜக எம்.பி. பா்வேஷ் சாகிப் சிங் வா்மா தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். அப்போது, எம்பி வா்மா கூறுகையில், ‘ஆம் ஆத்மி அரசு தில்லி முழுவதும் அதிகமான மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதித்ததன் மூலம் போதையின் தலைநகரமாக தில்லியை மாற்றி விட்டிருக்கிறது.

ADVERTISEMENT

தில்லி அரசின் கலால் கொள்கையில் பெரும் ஊழல் சம்பந்தப்பட்டிருப்பதால், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்றாா்.

இந்தக் கருத்து தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இருந்து உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக, தில்லி அரசின் கலால் துறை அமைச்சராக இருந்து வரும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘சட்டவிரோத மதுபான விற்பனையின் மூலம் பாஜக தலைவா்களால் ரூ.3,500 கோடி வருவாய் ஈட்டியதை இந்தப் புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பாஜக இந்த விவகாரத்தை எழுப்பி வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT