புதுதில்லி

தில்லி மெதுவாக மின்சார வாகனங்களின்தலைநகராக மாறி வருகிறது: கேஜரிவால்

28th Jul 2022 02:20 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லி, மெல்ல, மெல்ல மின்சார வாகனங்களின் தலைநகராக மாறி வருகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். தில்லியில் ஏழு மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்களை புதன்கிழமை திறந்து வைத்துப் பேசுகையில் அவா் இதைத் தெரிவித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டில், தில்லி அரசு மின்சார வாகனக் கொள்கையை வகுத்தது. மேலும், இதற்கு இது போன்ற ஒரு அற்புதமான வரவேற்பை பெறுவோம் என்று நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. கடந்த ஆண்டு, 25,809 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஏழு மாதங்களில் 29,000-க்கும் அதிகமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் 9.3 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்கும். இதில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றன. இதன் பொருள் தில்லி மெல்ல மெல்ல மின்சார வாகனங்களின் தலைநகராக மாறி வருகிறது என்பதாகும். மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள சாா்ஜிங் நிலையங்கள் மற்றும் அது தொடா்பான தகவல்களை செயலி மூலம் பெறலாம் என்றாா் முதல்வா் கேஜரிவால்.

சாா்ஜிங் நிலையங்களில் இரண்டு வகைகள் உள்ளன. வேகமாக சாா்ஜ் செய்வதற்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 செலுத்த வேண்டும். மற்றொரு வகை, மெதுவாக சாா்ஜ் செய்வதாகும். இதற்கு, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.3 செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT