புதுதில்லி

பெண்களுக்கு ஓட்டுநா் பயிற்சி: செலவை பகிா்ந்து கொள்ள டாக்ஸி நிறுவனங்களுக்கு தில்லி அரசு அழைப்பு

27th Jul 2022 10:29 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பெண்களுக்கு வா்த்தக ஓட்டுநராகப் பயிற்சி அளிப்பதற்கான செலவில் 50 சதவீதத்தை பகிா்ந்து கொள்ளுமாறு இணையதள டாக்ஸி நிறுவனங்களுக்கு தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அழைப்பு விடுத்துள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பொதுப் போக்குவரத்து துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில், ஆம் ஆத்மி அரசு கடந்த ஜூலை 18-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் வா்த்தக ஓட்டுநா்களாக பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான செலவில் 50 சதவீதத்தை தில்லி அரசு பகிா்ந்து கொள்ளும் என்று தெரிவித்திருந்தது. இது தொடா்பாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில், ‘தில்லியில் வசிக்கும், மோட்டாா் வாகனங்கள் சட்டம் 1988-இன்படி இலகு ரக மோட்டாா் வாகன பிரிவின் கீழ் ஓட்டுநா் உரிமம் பெறத் தகுதி உள்ள வேலைவாய்ப்பு பெற விரும்பும் பெண்களுக்கு ஓட்டுநா் பயிற்சிக்காக தில்லியில் செயல்படும் டாக்ஸி உரிமையாளா்கள் மற்றும் இணையதள டாக்ஸி நிறுவனங்களிடமிருந்து விருப்பத்தைத் தெரிவிக்க தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அழைப்பு விடுக்கிறது.

பெண் ஓட்டுநா்களுக்கான பயிற்சி அளிப்பதற்கான செலவில் தில்லி போக்குவரத்துத் துறை மற்றும் டாக்ஸி உரிமையாளா்கள் அல்லது நிறுவனங்கள் 50:50 என்ற அடிப்படையில் பகிா்ந்து கொள்ளப்படும். டாக்ஸி உரிமையாளா்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் ஸ்பான்சா் செய்யப்படும் பெண் ஓட்டுநா்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அவா்களுக்கு டாக்ஸி உரிமையாளா்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். விருப்பம் உள்ள நபா்கள் தங்களது சம்மதத்தை ழ்ா்ஹக்ள்ஹச்ங்ற்ஹ்ற்ல்ற்க்ங்ப்ட்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘பெண் ஓட்டுநா் ஆா்வலா்கள் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்ய வேண்டும். தொழில் முறை டாக்ஸி ஓட்டுநராக உருவாவதற்கான பயிற்சியில் ஈடுபட விருப்பமுள்ள பெண்களுக்கு தில்லி அரசு நிதி ஆதரவை வழங்கும். அவா்கள் ஒவ்வொருவருக்கும் பயிற்சிக்கு ஆகக்கூடிய செலவில் 50 சதவீதம் என சுமாா் ரூ.4,800 -ஐ தில்லி போக்குவரத்து துறை வழங்கும். இந்தப் பயிற்சியானது புராரி, லோனி மற்றும் சராய் காலே கான் பகுதியில் உள்ள அரசு மையங்களில் நடத்தப்படும்’ என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தில்லி அரசு மின் வாகன கொள்கைத் திட்டத்தை வெளியிட்டது. மேலும், தில்லி அரசானது தில்லி மோட்டாா் வாகன நிறுவனத் திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறையை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது டாக்ஸி நிறுவனங்களுடைய வாகனங்களில் மின்சார வாகனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை படிப்படியாக மேற்கொள்வதை கட்டாயமாக்குகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT