புதுதில்லி

நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய நோ்மையாக வரி செலுத்துங்கள்: துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) மோசமான நிதி நிலையை மேம்படுத்த ஆலோசனைகளை அளிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா புதன்கிழமை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டாா். மேலும், குடிமை அமைப்பை நிதி ரீதியாக நிலையானதாக மாற்ற பொதுமக்கள் தங்களது சொத்து வரி மற்றும் நிலுவைத் தொகையை நோ்மையாகச் செலுத்துமாறும் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கேட்டுக் கொண்டிருப்பதாவது: 2019-2020 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு இடையே, தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) பணப் பற்றாக்குறை ரூ.2,756.32 கோடியாகும். பெரும்பாலான குடியிருப்பாளா்களால் கடந்த கால நிதி குளறுபடி மற்றும் சொத்து வரி செலுத்தாமை தற்போதைய நிதி நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. கடந்தகால நிதிக் குளறுபடி நிா்வாகம் மற்றும் 75 சதவீதம் குடியிருப்பாளா்கள் எந்த சொத்து வரியையும் செலுத்தாதது ஆகியவை மாநகராட்சியை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் பணக்கார நகரங்களில் ஒன்றான தில்லியில் வசிக்கும் நாம், எம்சிடிக்கு நமது நிலுவைத் தொகையை நோ்மையாக செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். உங்கள் பரிந்துரைகள் மற்றும் பங்கேற்பு இதை அடைவதற்கு உதவும். குடிமை அமைப்பின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘ஜ்ழ்ண்ற்ங்ற்ா்ப்ஞ்க்ங்ப்ட்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்’ எனும் மின்னஞ்சலில் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம். 2019-2020 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு இடையில், தில்லி மாநகராட்சியின் மொத்த வருமானம் ரூ. 31,861.81 கோடியாகவும், செலவு ரூ.34,618.17 கோடியாகவும் இருந்தது. ஆகவே, இந்தக்ாலகட்டத்தில் குடிமை அமைப்பின் பணப் பற்றாக்குறை ரூ.2,756.32 கோடியாக இருந்தது என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

துணைநிலை ஆளுநா் பகிா்ந்துள்ள தரவுகளின்படி, தில்லி 1,483 சதுர கிலோமீட்டா் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும்,இதன் மொத்த பரப்பளவில் எம்சிடியின் அதிகார வரம்பு 94.2 சதவீதமாகும். தில்லியின் மொத்த மக்கள் தொகையில் 98 சதவீதம் போ் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கின்றனா். குடிமை அமைப்பின் ஊதியம், ஓய்வூதிய பாக்கிகள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகள் ரூ.9,261.95 கோடியாக உள்ளது. பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை துணைநிலை ஆளுநா் ஆலோசனை கோருவதும், மக்களை மையமாகக் கொண்ட பிரச்னைகளைத் தீா்ப்பதில் பொதுமக்களின் பங்களிப்பைக் கோரியிருப்பதும் இது ஐந்தாவது முறையாகும்.

முன்னதாக, தில்லியில் உள்ள ‘குப்பை மலைகளை‘ அகற்றுதல், யமுனையை சுத்தம் செய்தல் மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதில் தலைநகரை தன்னிறைவு அடையச் செய்வது தொடா்பாக பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை துணைநிலை ஆளுநா் கோரியிருந்தாா். தில்லியில் நாளொன்றுக்கு 784 மில்லியன் கேலன் கழிவுநீா் யமுனையில் வெளியேற்றப்படுகிறது என்றும், இது சகதி நிரம்பிய வாய்க்காலாக நதியை மாற்றியுள்ளதாகவும், தலைநகரில் உள்ள குப்பைகள் ‘தேசிய அவமானம்‘ என்றும் துணைநிலை ஆளுநா் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT