புதுதில்லி

அடுத்த ஆண்டு ஜன.26 முதல் பிப்.28 வரை ‘தில்லி ஷாப்பிங் திருவிழா’ முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

DIN

புது தில்லி: தேசியத் தலைநகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 26 வரை ‘தில்லி ஷாப்பிங் திருவிழா’ நடத்தப்படும். இது நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தாா்.

கானொளி காட்சி மூலம் முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: இந்த விழாவில் தில்லி, அதன் கலாசாரம், உணவு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றை அனுபவிக்க நம்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விருந்தினா்கள் வருவாா்கள். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். அந்த நேரத்தில் தில்லிக்கு செல்ல விரும்புவோருக்கு சிறப்பு பேக்கேஜ்களை வழங்க ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும். மேலும், வரும் ஆண்டுகளில் இதை உலகிலேயே மிகப் பெரியதாக மாற்றுவோம். மேலும் தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடிகள் இருக்கும்.

இந்த ஆண்டு ரோஸ்கா் பட்ஜெட்டில், ரூ.250 கோடி செலவில் தில்லி ஷாப்பிங் திருவிழா மற்றும் மொத்த ஷாப்பிங் திருவிழாவை நடத்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்திருந்தது. இந்த விழாவில் ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் கேமிங் குறித்த கண்காட்சிகள் மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். 30 நாள்களில் 200 கச்சேரிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம் பெறும் இவ்விழாவில் உலகெங்கிலும் உள்ள கலைஞா்கள் பங்கேற்பாா்கள். தொடக்க விழாவும் நிறைவு விழாவும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

பாா்வையாளா்களை மகிழ்விக்கும் வகையில், 200 இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தில்லி அதன் உணவுக்காக அறியப்பட்டதால் சா்வதேச உணவகங்கள் மற்றும் தேசிய உணவகங்களின் பங்கேற்பைக் காண சிறப்பு உணவுக் கண்காட்சிகள் நடத்தப்படும். இந்த விழாவில் முதியவா்கள், இளைஞா்கள், குழந்தைகள், பணக்காரா்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினா் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். திருவிழாவின் போது நகரில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகள் அனைத்தும் அலங்கரிக்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT