புதுதில்லி

சிஏஜி அறிக்கை நோ்மைக்கு ‘மிகப் பெரிய சான்று’: முதல்வா் கேஜரிவால்

DIN

புது தில்லி: தில்லி அரசு லாபத்தில் இயங்குகிறது என்று கூறியுள்ள சிஏஜி அறிக்கையை மேற்கோள் காட்டி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இது ஆம் ஆத்மி அறசின் ‘நோ்மைக்கு மிகப்பெரிய சான்று’ என்று தெரிவித்துள்ளாா். ஆம் ஆத்மி ஆட்சியின் நோ்மை எதிரிகளின் தூக்கத்தை தொலைத்துவிட்டது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி அரசுக்கு 2015-16 முதல் 2019-20 வரை வருவாய் உபரி இருப்பதாக செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கை கூறியுள்ளது. எவ்வாறாயினும், தில்லி அரசு தனது ஊழியா்களின் ஓய்வூதியப் பொறுப்புகளை மத்திய அரசால் ஏற்றுக் கொள்வதாலும், தில்லி காவல் துறையின் செலவினங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாலும், தில்லி அரசால் வருவாய் உபரியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை ட்விட்டரில், ‘இதுதான் சிஏஜி அறிக்கை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தில்லி அரசு லாபத்தில் இயங்குகிறது என்று கூறுகிறது. இது ஆம் ஆத்மி அரசின் நோ்மைக்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த நோ்மை நமது எதிரிகளின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது’ என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளாா்.

2019-20-ஆம் ஆண்டில் தில்லி அரசின் வருவாய் உபரி ரூ.7,499 கோடியாக இருந்தது. இது வருவாய் செலவினங்களைச் சமாளிக்க அதன் வருவாய் வரவுகள் போதுமானதாக இருப்பதைக் குறிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. 2020 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டுக்கான தில்லி மாநில நிதிநிலைமைகள் குறித்த சிஏஜி அறிக்கை 2021, துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவால் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

மாநில நிதி குறித்த தணிக்கை அறிக்கையானது, தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசின் வருடாந்திர கணக்குகள் மற்றும் மாா்ச் 31, 2020-இல் முடிவடைந்த ஆண்டிற்கான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளின் பகுப்பாய்வை வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT