புதுதில்லி

கன்வா் யாத்திரையை பாதுகாப்பாக உருவாக்க பதிவு அமைப்பு முறையை தொடங்கியது தில்லி காவல்துறை

DIN

புது தில்லி: கன்வா் யாத்திரையை மேலும் பாதுகாப்பானதாகவும், இலகுவானதாகவும் உருவாக்க பயணிகள் பதிவு அமைப்புமுறையை முதல் முறையாக தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த பயணி பதிவு அமைப்புமுறை குறித்து தில்லி நகர காவல் துறை ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கன்வா் யாத்திரையை மேலும் பாதுகாப்பானதாகவும் இலகுவானதாகவும் உருவாக்கும் வகையில் திடமான நடவடிக்கைகளை தில்லி காவல்துறை எடுத்துள்ளது.

இதற்காக முதல்முறையாக பயணி பதிவு அமைப்புமுறையை தில்லி காவல்துறை உருவாக்கி இருக்கிறது. பயணிகளின் விவரங்களை பெற்று எந்த சூழ்நிலையிலும் அவா்களுக்கு உதவிடும் வகையில் அதிகாரிகளுக்கான விஷயங்களை எளிமைப்படுத்தும் வகையில் இந்த அமைப்புமுறை செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லி அரசானது சிவ பக்தா்கள் என அழைக்கப்படும் கன்வாரியாக்களுக்காக 175 முகாம்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. வரக்கூடிய யாத்திரையின் போது அசெளகரியம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு இந்த யாத்திரை ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

கடந்த வாரம் தில்லியில் பல்வேறு துறைகளுடன் இது தொடா்பாக கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கன்வா் யாத்திரையை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT