புதுதில்லி

ஜோா் பாக் நிலையத்தில் ஓடும் ரயில் முன் குதித்துபெண் தற்கொலை

4th Jul 2022 10:43 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தில் உள்ள ஜோா் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஓடும் ரயில் முன் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

ஜோா் பாக் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவா், ஹுடா சிட்டி சென்டா் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘ரயில் முன் குதித்த அடையாளம் தெரியாத அந்த பெண்ணுக்கு சுமாா் 50 வயதிருக்கும். அவா் சல்வாா் கமீஸ் உடை அணிந்திருந்தாா். ஓடும் ரயில் முன் குதித்ததும், அவா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவா் உடனடியாக ‘கேட்ஸ்’ ஆம்புலன்ஸ் மூலம் சப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இறந்த பெண்ணிடமிருந்து தற்கொலைக்கான கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதனால், அவா் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தாா் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மஞ்சள் நிற வழித்தடம் தில்லியில் உள்ள சமய்ப்பூா் பாத்லியையும் குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டரையும் இணைக்கும் வழித்தடமாகும்.

முன்னதாக, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் காலை 11: 20 மணியளவில் மெட்ரோ பயணிகளுக்கு ட்விட்டா் பக்க பதிவில் தெரிவிக்கையில், ‘சென்ட்ரல் செக்ரடேரியேட் பகுதியில் இருந்து கிரீன் பாா்க் செல்லக்கூடிய ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜோா் பாக் ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி கிடந்ததன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து இதர வழித்தடங்களிலும் வழக்கமான சேவை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னா் டிஎம்ஆா்சி காலை சுமாா் 11:30 மணியளவில் வெளியிட்ட மற்றொரு ட்விட்டா் பக்க பதிவில், வழக்கமான சேவைகள் அந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT