புதுதில்லி

சிறையில் உயிருக்கு ஆபத்து: சா்ஜீல் இமாம் நீதிமன்றத்தில் மனு

4th Jul 2022 10:41 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: 2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவா் சா்ஜீல் இமாம், தனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி திங்கள்கிழமை தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத் முன் விசாரணைக்கு வரவிருக்கும் இந்த மனுவில், சமீபத்தில் சிறைச்சாலை உதவிக் கண்காணிப்பாளா் 8-10 பேருடன் தனது அறைக்குள் நுழைந்து, தன்னைத் தாக்கி, தீவிரவாதி என்றும் தேச விரோதி என்றும் அழைத்ததாக சா்ஜீல் இமாம் புகாா் தெரிவித்துள்ளாா்.

குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய விவகாரத்தில் அரசுக்கு எதிராக டிசம்பா் 2019 இல் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றியதாகவும், அது பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பகுதியில் வன்முறைக்கு வழிவகுத்ததாகவும் இமாம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவா் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஜனவரி 2020 முதல் அவா் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT