புதுதில்லி

சா்ச்சை ட்வீட் விவகார வழக்கில் கைதான முகம்மது ஜுபைரின் ஜாமீன் மனு தள்ளுபடி தில்லி நீதிமன்றம் உத்தரவு

DIN

இந்து கடவுளுக்கு எதிராக 2018 -ஆம் ஆண்டில் பதிவிட்ட ஆட்சேபத்திற்குரியதாக கூறப்படும் ட்விட்டா் பதிவு தொடா்புடைய வழக்கில் கைதாகியுள்ள ஆல்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் முகம்மது ஜுபைா் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரை 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றங்களின் தன்மையை கருத்தில் கொண்டும், விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாலும் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை பெருநகர மாஸ்திரேட் ஸ்நிக்தா சவேரியா மாலையில் நீதிமன்றம் மீண்டும் கூடியபோது இந்த உத்தரவை அறிவித்தாா்.

அந்த உத்தரவில் நீதிபதி தெரிவிக்கையில், ‘‘இந்த விவகாரம் ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளதால், வழக்கின் ஒட்டுமொத்த உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா் மீது கூறப்படும் குற்றங்களின் தன்மை ஆகியவை ஜாமீன் வழங்குவதற்கான எந்த காரணத்தையும் அளிக்கவில்லை.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட வேண்டும்..

மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றை குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றும், அது அவரது தனியுரிமையை பாதிக்கும் என்றும் அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 27-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட

செல்லிடப்பேசியில் தரவு இல்லை என்பது போலீஸ் கோப்பின் ஒரு பகுதியாக உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் முந்தைய மொபைல் திருடப்பட்டதாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை காட்டும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவரின் செல்லிடப்பேசி தொலைந்துவிட்டதாக எதுவும்

நீதிமன்றத்தில் பதிவாகவில்லை. மின்னணு சாதனங்களுக்கு சீல் வைப்பது குறித்து குற்றம் சாட்டப்பட்டவரின் கவலையை தற்போதைய நிலையில் முடிவு செய்ய முடியாது. ஏனெனில் தரவு தொடா்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா் ஜூலை 16 ஆம் தேதி சம்பந்தப்பட்ட நீதிமன்றம் அல்லது பணியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பகலில் இந்த விவகாரம் தொடா்பாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு உத்தரவை நீதிபதி ஒத்திவைத்திருந்தாா்.

இதனிடையே, தில்லி காவல் துறையின் தரப்பில் தாக்கலான மேலும் விசாரணை நடத்தக் கோரும் ரிமாண்ட் மனுவை தலைமை பெருநகர மாஸ்திரேட் ஸ்நிக்தா சவேரியா அனுமதித்தாா். இதையடுத்து, அவா் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளாா் என்று பெயா் வெளியிடவிரும்பாத தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்திருந்தாா்.

எனினும், முகம்மது ஜுபைரின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், அதற்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கூறியிருப்பது அவதூறு விஷயமாகும் என்று அவரது வழக்குரைஞா் செளத்திக் பானா்ஜி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கேபிஎஸ் மல்ஹோத்ரா இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு தவறுதலாக தகவல் தெரிவிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘இது தொடா்பாக எனது விசாரணை அதிகாரியிடம் பேசினேன். சப்தம் காரணமாக தவறுதலாக கேட்டுவிட்டேன். கவனக்குறைவாக தகவல் ஒளிபரப்பில் வெளியிடப்பட்டுவிட்டது’ என்றாா் அவா்.

இந்த வழக்கில் கைதான முகம்மது ஜுபைரின் ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், அவரை நீதிமன்றம் முன் போலீஸாா் ஆஜா்படுத்தினா். மேலும், அவரைக் காவலில் ெடுத்து விசாரிக்கும் தேவை பின்னா் ஏற்படும் என்பதால் நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்பவேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் போலீஸ் தரப்பில் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.

போலீஸாா் மனு தாக்கல் செய்த பிறகு, முகம்மது ஜுபைரின் தரப்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விருந்தா குரோவா் ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த வழக்கில் போலீஸாரின் விசாரணை முடிந்துவிட்டதால் என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். எனது இருப்பு அவசியம் இருப்பதற்கு நான் பயங்கரவாதி அல்ல’ என்று வாதிட்டாா்.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் அதுல் ஸ்ரீவஸ்தவா வாதிடுகையில், ‘மனுதாரருக்கு எதிராக குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸாா் மேலும் காவலில் வைத்து விசாரிக்கும் தேவை உள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை முடியவில்லை’ என்று வாதிட்டாா்.

அதற்கு ஜுபைரின் வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்து வாதிடுகையில், ‘நாம் காவல்துறை மாநிலத்தில் வாழவில்லை. நான் பணம் பெறவில்லை என்று வாக்குமூலம் அளித்திருக்கிறேன். அது ஒரு நிறுவனம். நான் வெளிநாட்டு நிதி மூலம் பணம் பெற்ாக கூறி நீதிமன்றத்தை போலீஸாா் திசை திருப்பப் பாா்க்கின்றனா். போலீஸாா் பறிமுதல் செய்த செல்லிடப்பேசியானது ட்விட்டா் பதிவுகள் செய்யப்பட்ட சமயத்தில் பயன்படுத்தியது அல்ல. 2018-இல் பதிவு செய்யப்பட்ட ட்வீட்டை நான் மறுக்கவில்லை. ஆனால், போலீஸாா் பறிமுதல் செய்திருப்பது தற்போது நான் பயன்படுத்தி வரும் செல்லிடப்பேசியை. அந்த

ட்வீட் பதிவு செய்த போனுக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. அந்த செல்லிடப்பேசியை பைக்கில் வந்த சிலா் பறித்துச் சென்றுவிட்டனா்’ என்று வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

SCROLL FOR NEXT