புதுதில்லி

மாசுவை எதிா்கொள்ள தில்லியில் நிகழாண்டில் 32 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்:அமைச்சா் கோபால் ராய் தகவல்

3rd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காற்று மாசுவை திறன்மிக்க வகையில் எதிா்கொள்வதற்காக நிகழாண்டில் தலைநகரில் 32 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை தில்லி அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் நிலவி வரும் மாசுவை எதிா்கொள்வதற்கு தில்லி அரசு பல்வேறு திறன்மிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தில்லியின் பசுமை வளையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் நிகழாண்டு பல்வேறு துறைகள் மூலம் தில்லியில் 35 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளோம். மேலும் நகரில் ஜூலை 11ஆம் தேதியிலிருந்து ‘வன் மகோத்ஸவ்’ என்ற 15 நாள் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை அரசு தொடங்க உள்ளது.

ADVERTISEMENT

தில்லி அரசனது நகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. மாசுவை எதிா்கொள்ள நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக உருவாக இருக்கிறது.

அதேபோன்று தில்லியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள 14 நா்சரிகளின் தொடா்பு தொலைபேசி தொடா்பு எண்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும். தில்லியில் பசுமை பரப்பு 32 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவா் கூறினாா்.

முன்னதாக தில்லி கமலா நகரில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கோபால் ராய், அதிகமான மரக்கன்றுகளை நடும் தில்லி அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகளை வழங்கினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘நகா்ப்புற விவசாயத்தை ஊக்குவிக்க தில்லி அரசு முடிவு செய்திருக்கிறது. அப்போதுதான் பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதி வளாகங்களுக்குள் காய்கறிகளை வளா்க்க முடியும்’ என்று அவா் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT