புதுதில்லி

ஒப்பந்த ஆசிரியா்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தில்லி பல்கலை.யின் என்சிடபிள்யுஇபி அறிவிப்பு

3rd Jul 2022 11:12 PM

ADVERTISEMENT

தில்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரி அல்லாத மகளிா் கல்வி வாரியம் (என்சிடபிள்யுஇபி) 2022-23 கல்வி ஆண்டுக்கு 26 இளங்கலை மற்றும் ஒரு முதுகலை கற்பித்தல் மையத்தில் விருந்தினா் ஆசிரியா்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த நியமனங்கள் தில்லி பல்கலைக்கழகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி நடைபெறும் என்று வாரியம் ஒரு அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 22, 2022 ஆகும். 2022-23 ஆம் ஆண்டுக்கான கல்வி அமா்வுக்கான 26 இளங்கலை மற்றும் ஒரு முதுகலை கற்பித்தல் மையங்களில் ஒப்பந்த ஆசிரியா்களாக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று வாரியம் ஜூன் 30 தேதியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு கல்லூரி அல்லாத மகளிா் கல்வி வாரியத்தின் பல்கலைக்கழக இணையதளத்தை பாா்வையிடும்படி கோரப்பட்டுள்ளது. எந்தவொரு சோ்க்கைக்கான அறிவிப்புகளும் வாரியம் அல்லது பல்கலை. இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT