புதுதில்லி

சா்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்திய மருந்துகளின் தரம் மேம்பட வேண்டும்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

2nd Jul 2022 12:47 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் சா்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மேம்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டாா்.

 

தில்லி விஞ்ஞான் பவனில் ‘எதிா்காலத்திற்கான மருத்துவத் தர நிவா்த்தி’ என்கிற கருப்பொருளில் இந்திய மருந்தகவியல் ஆணையத்தின் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 350-க்கும் மேற்பட்ட முன்னிலை மருந்து நிறுவனங்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவின் பவாா் மற்றும் மத்திய சுகாதாரம், ரசாயனத் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

நிகழ்ச்சியில், இந்திய மருந்தகத்தின் 9-ஆவது பதிப்பை வெளியிட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: இந்தியாவின் மருந்தியல் (இந்தியாவின் பாா்மகோபியா) உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும். ஜெனரிக் மருந்து உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ன் மூலம், உலகிற்கு மலிவு விலையில் மருந்தை வழங்கி இந்தியா இன்று ‘உலகின் மருந்தகமாக’ மாறியுள்ளது. ஆனால், மருந்துத் துறையில் ஆராய்ச்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். தற்போது ஆப்கானிஸ்தான், கானா, நேபாளம், மொரிஷியஸ் போன்ற நான்கு நாடுகள் மட்டுமே இந்திய மருந்தக தரநிலையை ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும், பல சா்வதேச நாடுகள் நமது மருந்தகத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் திட்டமிட்டு முன்னேற வேண்டிய நிலையில் உள்ளோம்.

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் அவரது திசையில் ஆற்றிய பணியின் பலனாக, சில சா்வதேச நாடுகள் நமது பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய மருந்துகளில் உள்ள வலிமையின் அடிப்படையில் சா்வதேச வா்த்தகம் மற்றும் தொழில்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது மருந்தகங்கள் இந்த அங்கீகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆரோக்கியமான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு, தடுப்பூசிகள், மருந்துகள், உபகரணங்கள் போன்றவற்றின் தரத்தைப் பேணுவதோடு, நோயாளிகளுக்கு இந்த மருந்துகளின் விளைவைக் கண்காணிப்பதற்கும் மருந்தியல் முக்கியமானதாகும்.

உலகளாவிய அளவில் 20 சதவீதம் வரை இந்தியா ஜெனரிக் மருந்துகளை வழங்கி வருகிறது. கரோனா நோய்த் தொற்றுகளின் போது, 150 நாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் பெறக்கூடிய அளவில் மலிவு விலையில் தடுப்பூசிகளை ஜெனரிக் (பொது) மருந்து உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் உலகிற்கு மலிவு விலையில் மருந்தை வழங்கி ‘உலகின் மருந்தகமாக’ இந்தியா மாறியுள்ளது வழங்கியுள்ளது. இந்த நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் பிற ஜெனரிக் மருந்துகளை விநியோகிக்கும் போது, நாம் ஒருபோதும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தரமற்ற அல்லது போலி மருந்துகளை வழங்கவில்லை. இதன் விளைவாக இந்தியா உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்றாா் அமைச்சா் மாண்டவியா.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சாா்பாக இந்திய மருந்தகவியல் ஆணையம் (ஐபிசி), இந்திய மருந்தக (ஐபி) பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் சந்தைப்படுத்துதல், மருந்துகளின் தரத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்ைதி செய்வதிலும் ஆணையம் பங்களிக்கிறது. ஐபியின் தரநிலைகள் அதிகாரபூா்வமானவை மற்றும் சட்டப்பூா்வமானவை. இது நம் நாட்டில் மருந்து உற்பத்தி, ஆய்வு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கான உரிமத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக 92 மோனோகிராஃப்கள் இணைக்கப்பட்டு 2022-ஆம் ஆண்டு ஐபி பதிப்பில் மொத்தம் 3,152 மோனோகிராஃப்கள் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT