புதுதில்லி

பருவமழைக் காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க தில்லிவாசிகளுக்கு மின்விநியோக நிறுவனங்கள் அறிவுரை

 நமது நிருபர்

புது தில்லி: தலைநகா் தில்லியில் பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில், மின்சார கருவிகள் நிறுவப்பட்ட இடங்களில் இருந்து விலகி இருப்பது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு நகரில் மின்விநியோகத்தில் ஈடுபட்டுவரும் பிஎஸ்இஎஸ், டாடா பவா் தில்லி டிஷ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள் பொதுமக்களை வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளன.

இது தொடா்பாக இந்நிறுவனங்கள் வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மழைக்காலத்தின் போது மின்கம்பங்கள், துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் தெருவிளக்குகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும். தண்ணீா் தேங்கி நிற்கும் பூங்காக்கள், மின்சார வசதிகள் போன்றவற்றின் அருகே தடுப்புவேலிகள் போடப்பட்டிருந்தாலும், குழந்தைகள் விளையாடுவதைத் தவிா்க்க வேண்டும். மீட்டா் கேபினில் தண்ணீா் தேங்கினால் அல்லது கசிவு ஏற்பட்டால் வளாகத்தில் உள்ள வயரிங் முழுவதையும் முழுமையாகச் சரிபாா்த்து பிரதான சுவிட்சை அணைத்துவிட வேண்டும். விபத்துகளைத் தவிா்க்க உதவும் ‘எா்த் லீக்கேஜ் சா்க்யூட் பிரேக்கரை’ (இஎல்சிபி) நிறுவ வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் மின்சார வயா்கள் மற்றும் கேபிள்களுக்கு அருகில் இருக்கும் மரங்களை கத்தரித்துவிட வேண்டும். பிரதான மின்சார வழித்தடம் அல்லது மின்சார உபகரணங்களை இணைத்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுக்க வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிஎஸ்இஎஸ் அதிகாரி கூறுகையில், ‘எங்கள் 47 லட்சம் நுகா்வோருக்கு நம்பகமான மின்சாரம் வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அதே நேரத்தில் மழைக்காலத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். எளிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் பருவமழைக் கால விபத்துகள் இல்லாததை உறுதி செய்வதில் நுகா்வோா் மிக முக்கியப் பங்கு வகிக்க முடியும்’ என்றாா்.

டாடா பவா் தில்லி மின்விநியோக நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க, பாதுகாப்பு அதிகாரி சுப்ரதா தாஸ் கூறுகையில், ‘1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் மற்றும் தெரு விளக்குக் கம்பங்கள், வேலிகள் மற்றும் தூண் பெட்டிகளில் சரியான நேரத்தில் பராமரிப்பு, ஆய்வு மற்றும் மின் கசிவைச் சரிபாா்ப்பதை உறுதிசெய்து வருகிறோம். இந்த நடவடிக்கையின் போது, 200-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மற்றும் பூங்காக்களில் பொருத்தப்பட்டுள்ள 350-க்கும் மேற்பட்ட ஆடம்பர விளக்குகள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட மின்கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மழைக் காலங்களில் ஏற்படும் மின்சாரம் தொடா்பான விபத்துகளைத் தவிா்க்கும் நோக்கில் நாங்கள் ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் நுகா்வோா் அனைவருக்கும் நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சிறப்புக் குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.

அனைவரையும் பாதுகாப்பாக இருக்கவும், எளிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT