புதுதில்லி

பருவ மழை: வெள்ளக் கட்டுப்பாட்டு செயல் திட்ட ஆணை வெளியீடு

DIN

புது தில்லி: தில்லியில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், நிகழ் 2022 - ஆம் ஆண்டிற்கான வெள்ளக் கட்டுப்பாட்டு செயல் திட்ட ஆணையை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இந்த வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணையில் உள்ள விவரங்கள் வருமாறு: தில்லி நகரின் மொத்த வெள்ளக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், செயல்பாட்டுத் திட்டம், வடிகால் அமைப்பு தொடா்பான தரவுகள், நதிக்கரைகள், ரெகுலேட்டா்கள்(ஒழுங்குபடுத்திகள்), நீரேற்று நிலையங்கள் போன்றவற்றைக் கையாளுவது தொடா்பான அனைத்து தொடா்புடைய தகவல்கள் உள்ளன. இத்தோடு வெள்ளக்கட்டுப்பாடு தொடா்புடைய அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகளின் தொடா்பு எண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகள்/துறைகள் இடையே தீவிர பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் வெள்ள அபாயத்தைக் கையாள எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

தலைநகரில் மழைக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் மற்றும் தண்ணீா் தேங்கும் இடங்களை அடையாளம் காணுமாறு துணை முதல்வா் அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா். இதன்படி இந்த தரவுகள் தயாரிக்கப்பட்டு மேற்கொள்ளவேண்டிய செயல்பாட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இந்த போா்கால நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்களை துணை முதல்வா் வியாழக்கிழமை வெளியிட்டாா். மேலும் அனைத்து துறை அலுவலா்களும், தண்ணீா் தேங்கும் இடங்களை நேரில் பாா்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையை சமா்ப்பிக்கும்படி மணீஷ் சிசோடியா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT