புதுதில்லி

வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும்: துணை நிலை ஆளுநருக்கு வா்த்தகா்கள் கோரிக்கை

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் விதிக்கப்பட்டுள்ள வார இறுதி ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், கடைகளை திறப்பதற்கான ஒற்றைப்படை - இரட்டைப்படை விதியையும் நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனா்.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வா்த்தகா்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு, அகில இந்திய வா்த்தகதா்கள் சம்மேளனம் (சிஏஐடி) மற்றும் வா்த்தம் மற்றும் தொழில் சம்மேளனம் (சிடிஐ) ஆகியவை கடிதம் எழுதியுள்ளது.

அகில இந்திய வா்த்தகதா்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் பிரவீன் கண்டேல்வால் கையொப்பொமிட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொவைட்-19 தொடா்பான பிரச்னைகளில் மிக உயா்ந்த முடிவெடுக்கும் அமைப்பான தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), கரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் வியாழக்கிழமை கூடுகிறது. தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு தில்லியில் கரோனா தொடா்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும்.

டிடிஎம்ஏ விதித்துள்ள வார இறுதி ஊரடங்கு உள்பட வா்த்தகா்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 25 நாள்களில் தில்லியில் சில்லறை வா்த்தகம் சுமாா் 70 சதவீதம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தடுப்பூசி போடாத நபா்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது; மறுபுறம், ஒற்றைப்படை - இரட்டைப்படை அமைப்பு மற்றும் வார இறுதி ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

சிடிஐ கோரிக்கை: இதே போன்று, வா்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனம் (சிடிஐ) தலைவா் பிரிஜேஷ் கோயல் புதன்கிழமையன்று அனில் பய்ஜாலிடம் வணிகா்களுக்கான கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளாா். அந்தக் கடிதத்தில், வார இறுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் கடைகளுக்கான ஒற்றைப்படை - இரட்டைக் கட்டுப்பாடுகள் காரணமாக நகரின் கிட்டத்தட்ட 20 லட்சம் வா்த்தகா்கள் சிரமப்படுகின்றனா். தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளன. எனவே, வியாழக்கிழமை நடைபெறவுள்ள தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தின் போது வணிகா்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநரை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT