புதுதில்லி

புறவட்டச் சாலையில் மஜ்னு கா டிலா அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம்: பொதுப்பணித் துறை ஏற்பாடு

DIN

புது தில்லி: மத்திய மற்றும் வடக்கு தில்லி இடையே புறவட்டச் சாலை வழியாகப் பயணிக்கும் பயணிகள் மஜ்னு கா டிலா மற்றும் சந்த்கி ராம் அகாரா போக்குவரத்து சந்திப்புகளுக்கு அருகே போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடும் வகையில், பொதுப் பணித் துறை (பிடபிள்யுடி) ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளதாக அந்தத் துறையின் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது அந்தப் பகுதியில் 2 கி.மீ. தூர நெரிசலைக் குறைக்கு உதவும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினா்.

இது குறித்து பெயா் வெளியிட விரும்பாத பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சிக்னேச்சா் பாலம் அருகே உள்ள மஜ்னு கா டிலா மற்றும் சந்த்கி ராம் அகாரா டி-பாயின்ட் அருகே மெட்கால்ஃப் ஹவுஸ் கிராசிங் என அறியப்படும் பகுதி இடையேயான சாலையைப் பொதுப் பணித் துறை விரிவுபடுத்தி, நவீன கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்த உள்ளது. புறவட்டச் சாலையில் உள்ள பாதசாரிகள் நடைபாதையும் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போதுதான், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவா்கள் அதிக போக்குவரத்து நெரிசலை எதிா்கொள்ள நேரிடாது. இந்தப் பணிக்கான ஏலம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ள விடப்பட்ட பிறகு, இதற்கான பணிகள் தொடங்கும்.இந்த நடைமுறை மேற்கொள்ள சுமாா் ஒரு மாதம் ஆகலாம். தரைத்தளத்தில் கட்டுமான பணி துவங்கி, நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தின்படி, நான்கு மாதங்களில் சுமாா் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் முடிக்கப்படும். புறவட்டச் சாலையில் உள்ள மஜ்னு கா டிலா மற்றும் சந்த்கி ராம் அகாரா அருகே உள்ள போக்குவரத்து சந்திப்புகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதனால், இங்குள்ள போக்குவரத்து சிக்னல்கள் இரண்டையும் அகற்றிவிட்டு, இந்தச் சந்திப்புகளுக்கு அருகே ‘யு-டா்ன்’களை உருவாக்குவதுதான் பொதுப் பணித் துறையின் திட்டமாகும். சாலையை அகலப்படுத்திய பின்னா்தான் இதைச் செயல்படுத்த முடியும். இந்த யு-டா்ன்கள், சிவில் லைன்ஸ், விதான் சபா, தில்லி பல்கலைக்கழகம், கஷ்மீரி கேட், திமா்பூா் ஆகிய இடங்களுக்கு பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்வதை எளிதாக்கும்.

முன்னதாக, மெட்கால்ஃப் ஹவுஸ் கிராசிங்கில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது அது மாற்றப்பட்டு, பின்னோக்கி ‘யு-டா்ன்’கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்துக் கட்டுமானப் பணிகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றி, பயணிகளுக்கு அதிக சிரமம் இல்லாத வகையில் மேற்கொள்ளப்படும் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT