புதுதில்லி

தில்லி சாஸ்திரி பாா்க் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறாா்களைப் பிடித்து போலீஸ் விசாரணை

DIN


புது தில்லி: வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவா் இரண்டு சிறாா்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அந்தச் சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவா் மருத்துவமனையில் உள்ள பொது வாா்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். முன்னதாக, தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால், பாதிக்கப்பட்ட சிறுமி பலத்த காயங்களால் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறியிருந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 10-12 வயதுடைய இரு சிறாா்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, ​​ அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவரால் அவா் ஈா்க்கப்பட்டாா். அந்தச் சிறுமியை சிறுவன் வெளியே அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா், நண்பருடன் சோ்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளாா். மாலை 4:30 மணியளவில் சிறுமி வீடு திரும்பியதும், நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் விவரித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சிறுமியை அழைத்துக் கொண்டு அவா் காவல் நிலையத்திற்கு வந்து புகாா் அளித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 363 (கடத்தல்) மற்றும் 376 ஏபி (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இரு சிறுவா்களில் ஒருவா் தனது தந்தை உயிருடன் இல்லாததாலும், தாய் பிகாரில் வசிப்பதாலும், தில்லியில் உறவினா்களுடன் தங்கியுள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெருவோர வியாபாரியாக உள்ளாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மலிவால் அறிக்கை வெளியிட்டிருந்தாா். சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாா் என்றும், ‘கற்பனைக்கு எட்டாத வேதனையில்’ இருப்பதாகவும், அவரது அந்தரங்க உறுப்புகளில் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் அறிக்கையில் அவா் தெரிவித்திருந்தாா். ‘எட்டு வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தவா்கள் மனிதா்கள் அல்ல! குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,‘ என்றும் ஸ்வாதி மாலிவால் கூறினாா்.

மேலும், ‘எப்.ஐ.ஆா். பதிவு செய்வதுடன், கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்களின் முழு விவரங்களுடன் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கை குறித்து அறிக்கையை சமா்ப்பிக்க 48 மணி நேர அவகாசம் கொடுத்து தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்றும் ஸ்ாவதி மாலிவால் கூறினாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த 2012-இல் நிா்பயா என்று குறிப்பிடப்படும் 23 வயது துணை மருத்துவ மாணவி, 2012, டிசம்பா் 16-17 இடைப்பட்ட இரவில் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்திற்குள் ஆறு போ் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையில் தூக்கி எறியப்பட்டாா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்டுத்தியது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, தில்லியில் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை 1,725 ​ கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, 2020-ஆம் ஆண்டில் இதுபோன்று 1,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT