புதுதில்லி

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரியாக சரிவு! ‘குளிா் நாள்’ தொடர வாய்ப்பு

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் குடியரசு தினமான புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாக குறைந்து, மற்றொரு ‘குளிா் நாள்’ பதிவாகியது. ஆனால், அது முந்தைய நாளைப் போல மிகவும் குளிா்ச்சியாக இருக்கவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘குளிா் நாள்’ தொடா்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிா்ந்த வடமேற்குக் காற்று வடக்கு சமவெளிகளைப் பகுதிகளில் வீசி வருவதால் இரவு நேர வெப்பநிலை நகரத்தில் 5.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. காண்பு திறன்

1,000 முதல் 1,500 மீட்டா் வரை ஊசலாட்டத்தில் இருந்தது. தில்லியில் கடந்த 9ஆண்டுகளில் இல்லாத வகையில் செவ்வாய்க்கிழமை ‘கடுமையான குளிா் நாள்’ பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி குறைந்து 12.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது கடந்த 2013, ஜனவரி 3-ஆம் தேதி 9.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் குளிா் நாளாக இருந்தது.

‘குளிா் நாள்‘ என்பது குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும், அதிகபட்சம் இயல்பை விட குறைந்தபட்சம் 4.5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்தால் குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது. அதே போல, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்தது 6.5 புள்ளிகள் குறைவாக இருந்தால். அது ‘கடுமையான குளிா் நாள்‘ என மதிப்பிடப்படுவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லி இதுவரை ஜனவரி மாதத்தில் ஆறு குளிா் நாள்களைப் பதிவு செய்துள்ளது. இது தொடா்பாக வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆா் கே ஜெனமணி கூறுகையில், ‘தில்லியில் இந்த மாதம் 11 நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டிலும் இதே எண்ணிக்கை பதிவாகியது.

இது போன்ற பதினெட்டு நாள்கள் 2003-இல் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

காரணம் என்ன?ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பிற்கு அருகே அல்லது அதற்கு மேல் உள்ளது. வானிலை தொடா்பான முன்னறிவிப்புகளை வழங்கும் ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் கூறுகையில், ‘மூடுபனி மற்றும் குறைந்த மேகங்கள்தான் சூரிய ஒளி நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தடுக்கின்றன’ என்றாா்.

இந்த ஜனவரி மாதத்தில் தில்லியில் ஏழு மேற்கத்திய இடையூறுகள் நடந்துள்ளன, இது பொதுவாக மாதத்தில் மூன்று முதல் நான்கு வரைதான் இருக்கும். மேற்கத்திய இடையூறுகள் காரணமாக மழை பெய்ததால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது, இது பெரும்பாலான நாள்களில் குறைந்த வெப்பநிலைக்கு மத்தியில் மூடுபனி நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளாா்.

வெப்பநிலை சரிவு: இதற்கிடையே, தேசியத் தலைநகா் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 5.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 6 டிகிரி குறைந்து 16.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 76 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்த நிலையிலேயே பதிவாகியிருந்தது. ஜஃபா்பூரில் 6.2 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 8.5 டிகிரி, ஆயாநகரில் 5.8 டிகிரி, லோதி ரோடில் 5.4 டிகிரி, நரேலாவில் 5.5 டிகிரி, பாலத்தில் 7.4 டிகிரி, ரிட்ஜில் 6 டிகிரி, பீதம்புராவில் 9.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 6.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

குளிா் நாள் தொடர வாய்ப்பு: இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜனவரி 27) அன்று தில்லியில் குளிா் நாள் நிலைமை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT