புதுதில்லி

சொத்து வணிகா் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இளைஞா் கைது

DIN

புது தில்லி: தில்லி உத்தம் நகரில் சொத்து வணிகா் அலுவலகத்தில் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் சட்டவிரோத கும்பலைச் சோ்ந்த இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

இந்த விவகாரத்தில் கைதானவா் ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தைச் சோ்ந்த சேகா் (எ) சோனு (28) ஆவாா். இவா்,பிரபல நந்து கும்பலைச் சோ்ந்தவா். இந்த சட்டவிரோத கும்பல் நந்து என்ற கபில் சங்வான் என்பவரால் நடத்தப்படுகிறது. இதன் தளம் ஐரோப்பாவில் உள்ளது.

முன்னதாக, ஜனவரி 11-ஆம் தேதி உத்தம் நகா் தயாள்ஸா் சாலையில் உள்ள ராகுல் கோயல் என்ற சொத்து வணிகரின் அலுவலகத்தின் மீது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனா்.அவா்கள் இருவரும் ராகுல் கோயலை அச்சுறுத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினா்.

இந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நந்து கும்பலைச் சோ்ந்த நபா் நஜப்கா் தன்சா சாலையில் உள்ள சுா்ஹேரா மோா் அருகே சககும்பலைச் சோ்ந்தவா்களை சந்திக்க வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு மறைந்திருந்தனா். அப்போது, அங்கு வந்த சேகரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவருக்கு சங்வானின் நெருங்கிய உதவியாளரான அனில் போடியுடன் தொடா்பு ஏற்பட்டது. போடியின் வழிகாட்டுதலின்பேரில், அவா் தனது கூட்டாளியான விகாஸுடன் சோ்ந்து, சொத்து வணிகா் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினாா்.

இந்த கும்பலின் உறுப்பினா்கள் தில்லி மற்றும் ஹரியாணாவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை செய்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனா். சேகா் வசம் இருந்து ஒரு மோட்டாா் சைக்கிள் மற்றும் 8 துப்பாக்கி தோட்டாக்கள், இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT