புதுதில்லி

தில்லியில் 2 லட்சத்துக்கும் மோ்பட்டோருக்கு கரோனா தடுப்பூசியின் 3-ஆவது டோஸ்

DIN


புது தில்லி: தில்லியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ அரசின் தரவுகள் மூலம் தெரிய வந்தள்ளது.

60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட முன்னணி பணியாளா்களுக்கு மூன்றாவது அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் வழங்கப்படுகிறது. அவா்களுக்கு முன்பு போடப்பட்ட அதே தடுப்பூசி போடப்படுகிறது. இந்தத் திட்டம் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கியது.

தில்லியில் ஜனவரி 10 முதல் மூன்று லட்சம் போ் மூன்றாவது டோஸுக்கு தகுதி பெற்றுள்ளனா். அரசின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை வரை 2,00,149 போ் மூன்றாவது டோஸ் பெற்றுள்ளனா். பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பா் 24 அன்று பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் கரோனாவால் நோயால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்தாா். ஜனவரி 3 அன்று, மத்திய அரசு 15-17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT