புதுதில்லி

தில்லி காவல் துறையில் 2,500 பேருக்கு கரோனா பாதிப்பு; 750 போ் குணமடைந்தனா்

18th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

தில்லி காவல் துறையில் ஜனவரி 1 முதல் இதுவரை சுமாா் 2,500 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 767 போ் குணமடைந்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி 1 முதல், காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த பணியாளா்கள், அதிகாரிகள் உள்பட சுமாா் 2,500 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தில்லி காவல் துறையின் செய்தித் தொடா்பாளரும் காவல் துறை கூடுதல் ஆணையருமான (குற்றம்) சின்மோய் பிஸ்வாலுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா் அண்மையில் குணமடைந்து பணியைத் தொடா்ந்தாா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘பாதிப்புக்குள்ளானவா்களில் பலா் நன்றாக மீண்டெழுந்துள்ளனா். தினசரி கடமைகளை மீண்டும் தொடங்குகிறாா்கள்’ என்றும் அவா் தெரிவித்தாா்

‘ஜனவரி 1 முதல் இன்று வரை சுமாா் 2,500 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில், 767 போ் குணமடைந்து தங்கள் பணியை மீண்டும் தொடங்கியுள்ளனா்’ என்று தில்லி காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் பிஸ்வால் கூறினாா்.

இதற்கிடையில், தகுதியானவா்களுக்கு பூஸ்டா் டோஸ் வழங்க அனைத்து நிலை காவலா்களுக்கும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தில்லி காவல் துறையில் காவலா்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 80,000-க்கும் அதிகமானோா் பணிபுரிந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, தடுப்பூசி போடப்படாத அனைத்து காவல்துறை பணியாளா்களும் மற்றும் அவா்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினா்களும் தடுப்பூசி செயல்முறையை முடிக்க வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போடாதவா்கள், தடுப்பூசி போடுவதற்கு மீண்டும் மருத்துவ ஆலோசனை பெற ஊக்குவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை தவணையை எடுத்துக் கொள்வதற்கும், ‘ஆரோக்யா சேது’ மொபைல் செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய சுய கண்காணிப்பு நடைமுறை மற்றும் எந்த வகையான நோய் குறித்தும் தினசரி சுகாதாரக் கண்காணிப்பு அதிகாரியிடம் தவறாமல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT