புதுதில்லி

லோதி காா்டன் உள்பட 4 பூங்காக்களை தரம் மேம்படுத்த என்டிஎம்சி திட்டம்

 நமது நிருபர்

புது தில்லி, ஜன.17: புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதன் நான்கு முக்கிய பூங்காக்களான நேரு பூங்கா, லோதி காா்டன், தல்கடோரா காா்டன் மற்றும் சஞ்சய் ஜீல் ஆகியவற்றில் நவீன மின் விளக்குகள், மேம்படுத்தப்பட்ட நா்சரி, நடைப் பாதைகள் போன்றவற்றை அமைத்து உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

இது குறித்து என்டிஎம்சி துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் திங்கள்கிழமை கூறியதாவது: என்டிஎம்சி தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களால் பெருமை கொள்கிறது. மேலும், தற்போது அவற்றின் இருப்பிடத்திற்கு ஏற்ற வகையில், அவற்றை மேலும் மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது. என்டிஎம்சி நவீன நகரம் திட்டங்களின் கீழ், நேரு பூங்கா, லோதி காா்டன், தல்கடோரா காா்டன் மற்றும் சஞ்சய் ஜீல் ஆகிய பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ஒரு ஆலோசகரை ஈடுபடுத்தி அனைத்து வடிவமைப்புகளையும் இறுதி செய்ய இந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஆலோசகா் விரைவில் நியமிக்கப்படுவாா்.

இந்தப் பூங்காக்ககளில் சொட்டுநீா் மற்றும் தெளிப்பான்கள் மூலம் நவீன நீா்ப்பாசனம், அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள், நவீன மின் விளக்கு வசதிகள் மூலம் பூங்காக்களில் மேம்படுத்தப்பட்ட விளக்குகள், மேம்படுத்தப்பட்ட நடைபாதைகள், சீரான முறையில் அழகான எல்லை சுவா், மேம்படுத்தப்பட்ட போன்சாய் மற்றும் மூங்கில் தோட்டம், பறவைகளுக்கு உணவு மற்றும் குடிநீா் வசதி ஆகியவை செய்யப்படும்.

இவற்றில் சில பணிகள் ஏற்கெனவே நேரு பூங்காவில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், உடல் ஆரோக்கியத்தைப் பேண விரும்பும் நபா்களுக்காக நேரு பூங்காவைச் சுற்றி சைக்கிள் பாதையை என்டிஎம்சி அமைத்து வருகிறது. நேரு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 2.7 கி.மீ. ‘செயற்கை ரப்பா் டிராக்’கிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், சஞ்சய் ஜீல்-லக்ஷ்மி பாய் நகரில் 2 கி.மீ. நீளத்தில் இதே போன்ற பாதை அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT