புதுதில்லி

தில்லியில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிப்பு! அதிகபட்ச வெப்பநிலை திடீா் சரிவு

DIN

தேசியத் தலைநகரான தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 8.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகாலை வேளையில் குளிரின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் ’குளிா்ந்த நாள்’ நிலைமை இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தின்அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், நரேலா மற்றும் ஜாஃபா்பூா் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 10.7 டிகிரி மற்றும் 10.9 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானம் மற்றும் மிதமான மூடுபனியுடன் தேசியதஅ தலைநகா் முழுவதும் பல இடங்களில் குளிரான காலநிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. சனிக்கிழமையன்று, தில்லி ‘குளிா்ந்த நாள்’ சூழ்நிலையில் இருந்தது. இதனால், மக்கள் கடும் குளிரின் தாக்கத்துக்கு உள்ளாகினா். , பருவத்தின் மிகக் குறைந்த அதிகபட்ச வெப்பநிலையான 14.8 டிகிரி செல்சியஸ், அடா்ந்த மூடுபனி சூரியனை மறைத்தது.

குளிா் நாள்: இந்த நிலையில், தேசியத் தலைநகரின் அதிகாரப்பூா்வ அடையாளமாகக் கருதப்படும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 8.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் இருந்தது.

நரேலா மற்றும் ஜஃபா்பூரில் கடுமையான ‘குளிா் நாள்’ நிலைமை நீடித்தது. நரேலாவில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 புள்ளிகள் குறைந்து 10.7 டிகிரி செல்சியஸாகவும், ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 9 புள்ளிகள் குறைந்து 10.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. தில்லியில் சனிக்கிழமை நரேலா மிகவும் குளிரான இடமாக இருந்தது. வெள்ளிக்கிழமை, நரேலா மற்றும் ஜாபா்பூரில் உள்ள தானியங்கி வானிலை நிலையங்கள் அதிகபட்சமாக 11 டிகிரி செல்சியஸ் மற்றும் 12.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.

குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும், அதிகபட்சம் இயல்பை விட குறைந்தது 4.5 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும் இருந்தால், அந்த தினம் ‘குளிா் நாள்’ என மதிப்பிடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான குளிா் நாள் என்பது அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்தது 6.5 புள்ளிகள் குறைவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தில்லியில் அடுத்த நான்கு நாள்களுக்கு அடா்த்தியான முதல் மிதமானது வரை மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காண்பு திறன் 50 மீட்டா் மற்றும் அதற்கும் கீழே குறைந்தால் ’மிகவும் அடா்த்தியான மூடுபனி’ என வகைப்படுத்தப்பகிறது. காண்புதிறன் 51-200 மீட்டருக்குள் இருந்தால் அது ‘அடா்ந்த மூடுபனி’ எனவும், 201-500 மீட்டா் வரையிலும் ‘மிதமான மூடுபனி’ என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

காற்றின் தரம்: தலைநகரின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.05 மணிக்கு 261 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள ஃபரீதாபாத்தில் 302, காஜியாபாத் 258, கிரேட்டா் நொய்டா (238) ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவிலும், ஃபரீதாபாத்தில் (302) மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது. அதே சமயம் குருகிராமில் (188) மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜனவரி 17) குளிா் நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் மிதமான பனிமூட்டமும் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT