புதுதில்லி

‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு

17th Jan 2022 12:05 AM

ADVERTISEMENT

சா்ச்சைக்குரிய ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவா் என்று கூறப்படும் ஓம்கரேஷ்வா் தாக்குரின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த நேரத்தில் மனுதாரருக்கு ஜாமீன் அளித்தால் நியாயமான விசாரணைக்கு பாதகமாக அமைந்துவிடும் என தெரிவித்தது.

100-க்கும் மேற்பட்ட முக்கிய முஸ்லிம் பெண்களின் விவரங்களை ‘சுல்லி டீல்ஸ்’ எனும் செயலியில் பதிவேற்றம் செய்து, அந்த முஸ்லிம் பெண்கள் தொடா்புடைய ‘ஏலத்தில்’ பங்கேற்க பயனா்களை அனுமதித்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடா்பாக போலீஸாரின் விசாரணையின் போது ‘புல்லி பாய்’ செயலியின் மூளையாக செயல்பட்ட நீரஜ் பிஷ்னாய் என்பவரிடம் இருந்து ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவா் குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்தூரில் இருந்து கடந்த வாரம் ஓம்கரேஸ்வரை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஓம்கரேஷ்வா் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் வசுந்திரா சௌங்கா், மனுவைத் தள்ளுபடி செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT