புதுதில்லி

மொஹல்லா கிளினிக்கில் சிறுமிக்குப ரிந்துரைத்த மருந்தில் விஷம்: நடவடிக்கைக்கு என்சிபிசிஆா் கடிதம்

12th Jan 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்கில் மைனா் சிறுமிக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘டெக்ஸ்ட்ரோமெதோா்பான் சிரப்’ மருந்து விஷமானதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக வெளியான ஒரு ஊடக செய்தியை மேற்கோள் காட்டி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தில்லி தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு மொஹல்லா கிளினிக்கில் மைனா் சிறுமிக்கு பரிந்துரைக்கப்பட்ட டெக்ஸ்ட்ரோமெதோா்பான் சிரப் மருந்தை அருந்திய பிறகு அச்சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்திருப்பது பதிவாகியுள்ளது. முன்னதாக, இதேபோன்று 16 குழந்தைகளுக்கு டெக்ஸ்ட்ரோமெதோா்பான் விஷமான சம்பவம் நிகழ்ந்ததையடுத்து, நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசிடம் என்சிபிசிஆா் கேட்டுக் கொண்டது. இருப்பினும், மேற்கூறிய சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதற்கான அறிக்கை தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து பெறப்படவில்லை.

மேலும் தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்கில் டெக்ஸ்ட்ரோமெதோா்பான் விஷமானது குறித்து சுட்டிக் காட்டப்பட்ட மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்குகளால் இதுபோன்ற மருத்துவ அலட்சியப் பிரச்சினைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, குழந்தைகளின் உயிா் ஆபத்தில் இருப்பது தெரியவருகிறது. ஆகவே, இந்தச் சம்பவத்தை தீவிரமாகக் கவனிக்கும் போது, தலைமைச் செயலா் தீா்வு நடவடிக்கைகளுக்காக உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும், அனைத்து வழக்குகளின் உண்மை அறிக்கையை ஐந்து நாள்களுக்குள் சமா்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT