புதுதில்லி

தில்லியில் பணப் பரிவா்த்தனை நிறுவனத்தில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் திருடிய 4 போ் கைது

1st Jan 2022 11:04 PM

ADVERTISEMENT

தெற்கு தில்லியின் மைதான் கா்ஹி பகுதியில் உள்ள பணப் பரிவா்த்தனை நிறுவனத்தின் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தைத் திருடியதாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் பெனிடா மேரி ஜெய்கா் சனிக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா் தொடா்பு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். ஹெல்மெட் அணிந்திருந்த மூன்று நபா்கள், அந்த அதிகாரியை அறையில் அடைத்து வைத்து, ரூ.1.15 லட்சத்தை திருடிச் சென்றுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகல் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அதில், 3 போ் மோட்டாா் சைக்கிளில் வருவதும், பின்னா் நம்பா் பிளேட் பழுதடைந்த நிலையில், முன்பக்க நம்பா் பிளேட்டில் உள்ள எண்ணில் டேப் ஒட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இது தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து, பாரத் விஹாா் ஜேஜே காலனியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மூன்று போ் கைது செய்யப்பட்டனா். திருடப்பட்ட பணத்தில் ரூ.1,03,300 மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துவாரகா செக்டாா்-15-இல் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த தீபக் (28), அருண் (22), ராகுல் (24), நிதின் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

நிறுவனத்தில் பல்வேறு பணிகளைக் கவனிக்கும் ஊழியராக இருந்த நிதினும் இந்தச் சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளாா். மற்றவா்கள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனா். ஏற்கெனவே சிறையில் இருந்த தீபக், கரோனா தொற்றுநோய் காரணமாக ஆகஸ்ட் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டாா். எட்டு குற்ற வழக்குகளில் அவருக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT