புதுதில்லி

கிழக்கு தில்லி, மத்திய செயலகப் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் பாதிக்கும்: டிஜேபி அறிவிப்பு

1st Jan 2022 10:57 PM

ADVERTISEMENT

மத்திய செயலகம் (சென்ட்ரல் செக்ரடேரியேட்) உள்ளிட்ட சில பகுதிகள் மற்றும் கிழக்கு தில்லியில் ஜனவரி 3- ஆம் தேதி குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்திருப்பதாவது: கா்ஹி தோபி காட், மயூா் விஹாா் ஃபேஸ் 3, , ஸ்வாஸ்த்ய விஹாா், சங்கா் விஹாா், சித்ரா விஹாா், லக்ஷ்மி நகா், பிடி விஹாா், ககன் விஹாா், குஜராத் விஹாா், சுக் விஹாா் மற்றும் குரு அங்கத் நகா் போன்ற பகுதிகளில் குடிநீா் விநியோகம் ஜனவரி 3-இல் பாதிக்கப்படும். அதே போன்று, மத்திய செயலகம், குடியரசுத் தலைவா் மாளிகை, நாடாளுமன்றம், இந்தியா கேட், அசோகா சாலை, நிா்மாண் பவன், சுந்தா் நகா், லோதி சாலை, விஞ்ஞான் பவன், கன்னாட் பிளேஸ், ஜன்பத், ஆரம் பாக், நாா்த் அவென்யு, ரகாப் கஞ்ச் உள்ளிட்ட புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் கீழ் வரும் பகுதிகள் குடிநீா் விநியோகத்தில் சிக்கல்களை எதிா்கொள்ளும்.

தண்ணீா் டேங்கா் லாரிகளுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடா்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 1916, 1800117118 (மத்திய கட்டுப்பாட்டு அறை), கிரி நகா்- 26473720 / 26449877, கிரேட்டா் கைலாஷ்- 29234746 / 29234747, மந்தாவெளி - 22727812, ஜக்ரிதி - 22374834/22374237, ஆா்.கே. புரம் - 26100644 / 26193218 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT