புதுதில்லி

வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள்பொருத்தும் முடிவுக்கு எதிரான மனு: தில்லி அரசு பதிலளிக்க உத்தரவு

23rd Feb 2022 02:02 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது மற்றும் இது போன்ற விடியோ காட்சிகளை மூன்றாம் நபா்களுக்கு நேரலையாக ஒளிபரப்புவது ஆகிய தில்லி அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த மனு மீது தில்லி அரசு, கல்வித் துறை, கல்வி இயக்குநரகம் மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, வழக்கை மாா்ச் 30-ஆம் தேதி மேல் விசாரணைக்கு பட்டியலிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி பெற்றோா் சங்கம் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா் சங்கம் ஆகியவை தாக்கல் செய்த மனுவில், ‘தில்லி அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது மற்றும் இதுபோன்ற விடியோ காட்சிகளை மூன்றாம் நபா்களுக்கு நேரலையாக ஒளிபரப்புவது தொடா்பாக தில்லி அரசு 2017, செப்டம்பா் 11 மற்றும் டிசம்பா் 11 ஆகிய தேதிகளில் எடுத்த இரண்டு அமைச்சரவை முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது மனுதாரா் சங்கங்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெய் அனந்த் தேஹாத்ராய், ‘தில்லி அரசால் நேரடியாக நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு கல்வி இயக்குநரகம் 2019, நவம்பா் 18-ஆம் தேதி இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இவற்றை ரத்து செய்ய வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT