புதுதில்லி

பாஜக தலைவரின் அவதூறு வழக்குஆம் ஆத்மி தலைவா்களுக்கு சம்மன்

17th Feb 2022 02:04 AM

ADVERTISEMENT

தில்லி பாஜக தலைவா் சய்ல் பிஹாரி கோஸ்வாமி தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் சத்யேந்தா் ஜெயின், அதிஷி, ராகவ் சத்தா, சௌரப் பரத்வாஜ் மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோா் ஆஜராக தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அவதூறு புகாரில் குற்றம் சாட்டப்பட்டவா்களை மாா்ச் 14-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ரவீந்திர குமாா் பாண்டே உத்தரவிட்டாா்.

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) நிதி தொடா்பாக, சம்பந்தப்பட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் தனக்கு எதிராக அவதூறான கருத்துகளைக் கூறியதாக கோஸ்வாமி தாக்கல் செய்த புகாரின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. கோஸ்வாமி வடக்கு தில்லி மாநகராட்சியின் நிலைக் குழுவின் தலைவராக உள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT