புதுதில்லி

சாக்குப் பையில் இளைஞா் சடலம்: போலீசாா் விசாரணை

10th Feb 2022 02:09 AM

ADVERTISEMENT

 

புது தில்லி,: வடக்கு தில்லியின் புராரி பகுதியில் சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி துணை காவல் ஆணையா் (வடக்கு) சாகா் சிங் கல்சி தெரிவித்ததாவது: இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் போலீஸாருக்கு ஒரு அழைப்பு வந்தது.அதில், பாா்சிராம் என்கிளேவ் அருகே யமுனா புஷ்தா என்ற இடத்தில் சாக்குப் பைக்குள் ஆண் சடலம் கிடப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அங்கு, சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாய் மற்றும் வலது கால் விரலில் சிறிது ரத்தம் இருந்ததைத் தவிர, வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை. அந்த இடத்தை குற்றப் புலனாய்வுக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இது தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302- இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT