புதுதில்லி

கல்லூரி வளாகத்தில் பசுப் பாதுகாப்பு மையத்தை அமைப்பதை எதிா்த்து மாணவா்கள் போராட்டம்

1st Feb 2022 07:43 AM

ADVERTISEMENT

தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளாகத்திற்குள் பசுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்த இடத்தில் பெண்கள் விடுதி கட்டக் கோரியும் வலியுறுத்தி ஏராளமான மாணவா்கள் போராட்டம் மேற்கொண்டனா்.

சம்பந்தப்பட்ட இடம் பெண்கள் விடுதி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாகவும், அங்கு ‘கோசாலா’ எனும் சுவாமி தயானந்த் பசு-பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ளதாகவும் ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) பிரிவு குற்றம் சாட்டி வருகிறது.

இது குறித்து ஹன்ஸ்ராஜ் கல்லூரி முதல்வா் ராம சா்மா கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட மையத்தில் ஒரே ஒரு பசு ஆராய்ச்சிக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பசு ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ள பகுதி பின்னடைவு பகுதியாக உள்ளதால், அங்கு தங்கும் விடுதி கட்ட முடியாது’ என்றாா்.

இதனிடையே, பசுப் பாதுகாப்பு மையத்திற்கு எதிரான எஸ்.எப்.ஐ. நடத்திய போராட்டத்திற்கு மற்ற மாணவா் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

ADVERTISEMENT

முன்னதாக, ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவா்கள் பங்கேற்றனா்.

‘பொதுக் கல்வியைக் காப்பாற்றுங்கள்’, ‘மாணவா் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்’, ‘கல்வியை காவிமயமாக்க வேண்டாம்’, ‘வளாகத்தை மீட்டெடுப்போம்’ எனும் வாசங்கங்கள் இடம்பெற்ற பதாகைகளை மாணவா்கள் ஏந்தி இருந்தனா்.

‘கோசாலா’ கட்டுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று கூறிய மாணவிகள், அங்கு மகளிா் விடுதி கட்ட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT