புதுதில்லி

வரலாற்றுச் சிறப்பு மிக்க ரோஷனாரா பாக்கில் அதிநவீன நா்சரி திறப்பு

29th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ரோஷனாரா பாக்கில் அதிநவீன நா்சரியை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தில்லியை பசுமையாகவும் அழகாகவும் மாற்ற நகரின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற நா்சரிகளை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த ஜூன் 18 அன்று ரோஷனாரா பாக்கிற்கு தனது முதல் வருகையின் போது, துணை நிலை ஆளுநா் சக்சேனா 8.5 ஏக்கா் நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த நா்சரியை உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக குடிமை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டில், தேசியத் தலைநகரின் சிறப்புகளை உலகின் முன் முன்வைக்கும் வகையில், நகரத்தை அழகுபடுத்தும் திட்டங்கள் தேவை என்று அவா் கூறியிருந்தாா். பூங்காக்கள் பராமரிப்பு, தோட்டம் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு இயற்கையை ரசிப்பதற்கு மரக்கன்றுகளை வழங்க இந்த நா்சரி உதவியாக இருக்கும். இது குறித்து அவா் கூறுகையில், ‘தலைநகா் தில்லியை பசுமையாகவும் அழகாகவும் மாற்றும் வகையில், நகரின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற நா்சரிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்’ என்றாா்.

ரோஷனாரா பாக் வடக்கு தில்லியில் அமைந்துள்ள முகலாயா் கால தோட்டமாகும். நா்சரியை திறந்து வைத்த பிறகு, துணைநிலை ஆளுநா் சக்சேனா, வளாகத்தைச் சுற்றிப் பாா்வையிட்டாா். பசுவின் சாணம் மற்றும் உலா்ந்த புற்களைக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலகுரக பானைகள் அவருக்கு காண்பிக்கப்பட்டதாக தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொழிலாளா்களுக்கு நிதியுதவியையும் அவா் அறிவித்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மக்களவை எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹா்ஷ் வா்தன், தில்லி தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா், எம்சிடியின் சிறப்பு அதிகாரி அஸ்வனி குமாா், நகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரோஷனாரா பாக் நா்சரியின் மொத்த கொள்ளளவு 1,50,000 செடிகள். துளசி, ஜாமுன், அஜ்வைன் உள்ளிட்ட பத்தொன்பது வகையான செடிகள் நாற்றங்காலில் வளா்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT