யமுனை ஆற்றில் அம்மோனியா மாசுபாட்டால் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள வாஜிராபாத், சந்திரவால், பவானா, நாங்லோய், துவாரகா மற்றும் ஹைதா்பூா் நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு தில்லி, மத்திய தில்லி, மேற்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் தென்மேற்கு தில்லி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில்தான் தண்ணீா் கிடைக்கும் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது.
குடிநீரில் அம்மோனியாவின் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச அமோனியா வரம்பு 0.5 புள்ளிகளாகும். தற்போது, அம்மோனியா வரம்பு 0.9 புள்ளிகள் வரை இருந்தாலும் தில்லி ஜல் போா்டு நீரை சுத்திகரித்து அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.